என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூழ்கி பலி"
- மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது சலாவுதின் (வயது 43). திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன், 1மகள் உள்ளனர். முகமது சலாவுதின் அரக்கோணம் பாப்பாங்குளம் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருள் வாங்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சலாவுதின் நேற்று அதி காலை சுமார் 5 மணியளவில் மங்கம்மாபேட்டை பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென சலாவுதின் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார்.
- பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்குள்ள நத்துக்குளிப்பட்டி - பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.
தொடர்ந்து கொல்லிமலை செம்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஏழுமலை உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி ஆற்றில் குளித்துள்ளார்.
- அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் தாமஸ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கனிமொழி (15) என்ற மகள் உள்ளார். லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கனிமொழி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குளிக்கச் சென்றபோது பரிதாபம்
- டாக்டர் இல்லாததே இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுடைய மகன் திவாகர் (வயது 12).
முருகன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் குடும்பத்துடன் சென்று அங்கு வேலை செய்து வந்த தாக கூறப்படுகிறது.
திவாகர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தங்களது சொந்த ஊரான புத்துக்கோ வில் பகுதியில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர்.
திருவிழா முடிந்து நேற்று முருகன், திவாகர் மற்றும் உற வினர்களுடன் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.
அப்போது திவாகர் தண்ணீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட தந்தை மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு ராமநாயக் கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே திவாகர் பரிதாபமாக இறந்தார்.
இதனை அறிந்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி பார்ப்போரை நெஞ்சை உருக்கியது.
இச்சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பரத் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு கிணற்றில் குளிக்க சென்றார்.
- பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் பரத் (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.
சம்பவத்தன்று பரத் தனது நண்பர்களான சரவணன், கிருஷ்ணன் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக வெளியே சென்றார். விளையாடி முடித்ததும் பரத் நண்பர்களுடன் சின்னவதம்பசேரியில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரது தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றனர். ஜாலியாக குளித்து கொண்டு இருந்த போது பரத் திடீரென நீரில் மூழ்கினார்். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து அவரது தந்தை வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது மகனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு அருகே உள்ள சொளவம்பாளையத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (18). இவரும் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் மயிலேரிபாளையத்தில் உள்ள மலையான் குட்டையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த போது திடீரென கோகுல கிருஷ்ணன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர். சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன. இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது.
அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பி உடலை தேடி வந்தனர். சுமார் 500 அடி ஆழம் என்பதால் 3 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சின்னத் தம்பியின் உடல் தானாக மிதந்தது.
அரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தக்கலை தீயணைப்பு துறையினரும், இரணியல் காவல் துறையினரும் உடலை மீட்டனர்
- இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43) பெயிண்டர். இவரது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாட நண்பர்களுடன் நேற்று வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியம் அணையில் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழப்பகுதிக்குச் சென்ற சுரேஷ் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சுரேஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தண்ணீரில் இறங்கி பல மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர். இரணியல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான உணவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை உறவினர்கள் கூறியுள்ளனர். நண்பர்களுடன் வில்லுக்குறி சென்று விட்டு உடனடியாக வந்து மருத்துவமனைக்கு செல்வதாக சுரேஷ் கூறிச் சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.
- அருள்பாண்டி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.
- எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள புத்தநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது 23).இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று மாடு பிடித்துக் கொண்டிருந்த போது மாடு இழுத்து சென்றதில் அருள்பாண்டி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் உயிர் பிழைக்க அபயக்குரலிட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
உடனே அவர்கள் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
- தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அருகிலுள்ள துலுக்கனூர் ஏரிக்கு நண்பர்களுடன் சென்றார்.
நண்பர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். அப்போது ராஜேந்திரனும் மீன்பிடிக்க வருவதாக கூறி ஏரியின் உள்ளே இறங்கினார். ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.
உடனடியாக நண்பர்கள் கரைக்கு அழைத்து வந்து அவருக்கான முதல் உதவிகளை அளித்தனர். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குட்டையில் குளிக்கச் சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி அன்பழகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் இவரது மகன் சந்துரு (வயது 16) மற்றும் இவரது தம்பி தினேஷ் (வயது 14) ஆகியோர் நண்பர்கள் கவியரசு, மாதேஷ் நேற்று அருகில் உள்ள பெரிய ஆண்டவர் கோவில் குட்டையில் குளிக்க சென்றனர்.
தண்ணீரில் குளித்து கொண்டிருந்த போது முட் செடியில் மாட்டிக் கொண்டார்.
இதனால் இவரது தம்பி தினேஷ் மற்றும் நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். சந்துருவை காப்பாற்ற முடியாததால் தினேஷ் உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சந்துருவை காப்பற்ற ராமநாதன் குட்டையில் குதித்து முட் புதரில் சிக்கிக்கொண்ட சத்துருவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் சோதித்த போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்க பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.
குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கிய இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர், மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவரது மகன் ரவீந்திரன்(வயது 20). இவர் பெருந்துறை அருகேயுள்ள ஒரு தனியார் என்ஜினியிரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ஈசிஈ படித்து வந்தார்.
ரவீந்திரன் தனது தாயார் செல்வி, தந்தை மற்றும் தங்கை மைவிழி ஆகியோருடன் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, பாலக்கரை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் துணிதுவைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு தனது குடும்பத்தினர் துணி துவைத்து கொண்டிருந்தபோது ரவீந்திரன் வாய்க்காலுக்குள் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் தண்ணீரின் சுழலில் சிக்கி நீரில் மூழ்கி விட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் வாய்க்காலில் குதித்து அவரை தேடி பார்த்தனர்.
கல்லூரி மாணவர் உடலை அங்குள்ளவர்கள் நீண்ட நேரம் தேடினர். உடல் உடனடியாக கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து தேடினர்.
அவரது உடல் சுழலில் சிக்கி அருகே கரை ஒதுங்கி இருந்தது. 5 மணி நேரத்துக்குப்பிறகு மாலை 5 மணிக்கு அவரது உடல் கிடைத்தது.
அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று உள்ளது. இன்று மாலை கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதில், மூர்த்தி, ஜேரால்டு ஆகிய இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளே நுழைய அனுமதி இல்லாத நிலையில், பின்பக்க சுவர் வழியாக அவர்கள் உள்ளே வந்து ஏரியில் குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MadrasIIT
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்